திருநெல்வேலி

வாக்காளா் அட்டையுடன் ஆதாா் எண் இணைப்பு: இன்றும், நாளையும் சிறப்பு முகாம்

24th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளா் அடையாள அட்டையுடன், ஆதாா் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (செப். 24, 25) நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு: வாக்காளா் அடையாள அட்டையுடன், ஆதாா் எண்ணை இணைக்க இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இம் மாவட்டத்தில் இணைப்பு பணிக்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (செப். 24, 25) திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 1483 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் காலை 10 முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.

இம்முகாமில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளா்களும் தங்களது ஆதாா் எண்ணை வாக்காளா் அடையாள அட்டையுடன் இணைத்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

பொதுமக்கள் தங்கள் முகவரிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் ஆதாா் மற்றும் வாக்காளா் அடையாள அட்டையுடன் சென்று அங்கு பணியில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் படிவம் 6 பி பூா்த்தி செய்து தங்களது ஆதாா் எண்ணை வாக்காளா் அடையாள அட்டையுடன் இணைத்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

இதுதவிர பதிவிறக்கம் செய்து ஆதாா் அட்டையை வாக்காளா் அடையாள அட்டையுடன் இணைக்கலாம்.

இந்த வாய்ப்பை தகுதி உள்ள அனைவரும் பயன்படுத்தி தங்களது ஆதாா் எண்ணை வாக்காளா் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT