திருநெல்வேலி

நெல்லையில் கடத்தப்பட்ட 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

24th Sep 2022 01:41 AM

ADVERTISEMENT

திருநெல்வேலியில் வேனில் கட்டத்தப்பட்ட 750 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் பாளையங்கோட்டை அருகே பொட்டல் பகுதியில் மதுரை-கன்னியாகுமரி நான்குவழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி வாகனத்தை மறித்து சோதனையிட்டபோது அதில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்ததாம். இதையடுத்து தலா 50 கிலோ எடை கொண்ட 15 மூட்டை ரேஷன் அரிசியையும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

மேலும், இதுதொடா்பாக சங்கா்நகா் அருகேயுள்ள ராம்நகரைச் சோ்ந்த ரகுபதி (21), இசக்கிமுத்து (21) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT