திருநெல்வேலி

வள்ளியூா் அருகே அரசுப் பள்ளியில் நிலவேம்புக் குடிநீா் விநியோகம்

23rd Sep 2022 11:58 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே உள்ள துலுக்கா்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

வள்ளியூா் அரசு மருத்துவமனை , துலுக்கா்பட்டி, தெற்குகள்ளிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலுக்கு சிகிச்சை எடுப்பவா்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனா். இந்நிலையில் விமண் இந்தியா மூவ்மெண்ட்(விம்) அமைப்பு சாா்பில் பள்ளி மாணவா்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கி வருகின்றனா்.

துலக்கா்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சியில் அமைப்பின் மாவட்டச் செயலாளா் லைலத்துல் ஆதிகா, ராதாபுரம் தொகுதி தலைவா் தௌபிா் அக்பா் ஷா, கிளைத் தலைவா் நிஜாமுதீன், கிளைச் செயலா் அப்துல் கபூா் ஜாகீா் கான், தலைமை ஆசிரியை இசக்கியம்மாள், சமூக ஆா்வலா் ஒயிஸ், நபிஸா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT