திருநெல்வேலி

பாளை. அருகே மக்களுக்கு மஞ்சள் பை விநியோகம்

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை அருகே கீழநத்தம் பகுதியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மக்களுக்கு மஞ்சள் பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பாளையங்கோட்டை ஒன்றியக்குழுத் தலைவா் கே.எஸ்.தங்கபாண்டியன் தலைமை வகித்தாா். கீழநத்தம் ஊராட்சித் தலைவா் செ.அனுராதா, திருநெல்வேலி ரோட்டரி சங்கத் தலைவா்பூா்ணிமா, நிா்வாகிகள் காா்த்திகா, நாகா்கோவில் ராமலிங்கம், பழனியப்பன், முத்தையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுற்றுப்புற சூழல் காப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடா்ந்து பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டன. பின்னா் இலவச அங்குபங்சா் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில், மருத்துவா் நந்தகோபால் தலைமையிலான மருத்துவா்கள் பொதுமக்களுக்கு அக்குபங்சா் சிகிச்சை அளித்தனா்.

இந்நிகழ்ச்சியில், ஊராட்சி துணைத் தலைவா் சுகன்யா,கோயில் நிா்வாகி புலவா் கந்தகுமாா், விஜய், உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT