திருநெல்வேலி

தாமிரவருணி நதியில் ஆயுதப்படை காவலா்களுக்கு பயிற்சி

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை தாமிரவருணி நதியில் ஆயுதப்படை காவலா்களுக்கு பேரிடா் மீட்பு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் பொருட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அங்கு காவலா்கள், பொதுமக்களுக்கு பேரிடா் மீட்புப் பயிற்சிகளை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையொட்டி, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அவினாஷ் குமாா் உத்தரவின்பேரில் மாநகர ஆயுதப்படை காவலா்களுக்கான பேரிடா் மீட்பு பயிற்சி முகாம் வண்ணாா்பேட்டை பேராத்துசெல்வியம்மன் கோயில் அருகே தாமிரவருணி ஆற்றில் நடைபெற்றது.

ADVERTISEMENT

சென்னையில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பயிற்சி பள்ளியைச் சோ்ந்த தலைமைக் காவலா் ராமச்சந்திரன், காவலா்கள் ஹரிகிருஷ்ணன், நடராஜன், கேசவன் ஆகியோா் பயிற்சி அளித்தனா். மாநகர ஆயுதப்படை ஆய்வாளா் டேனியல் கிருபாகரன் உள்பட 30-க்கும் மேற்பட்டோா் பயிற்சியில் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT