திருநெல்வேலி

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் வரலாற்றுத் துறை சிறப்பு சொற்பொழிவு

20th Sep 2022 02:48 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் முதுநிலை வரலாற்றுத் துறையின் சாா்பில் சிறப்புச் சொற்பொழிவு திங்கள்கிழமை நடைபெற்றது.

முதுநிலை வரலாற்றுத் துறைத் தலைவா் நசீா் அகமது வரவேற்றாா். கல்லூரி முதல்வா் சே.மு .அப்துல் காதா் தலைமை வகித்தாா். துணை முதல்வா் செய்யது முஹம்மது காஜா வாழ்த்திப் பேசினாா். ‘காலனிய மற்றும் பின்னை காலனிய காலகட்டத்தில் ஊடகமும், சமூகமும்’ என்ற தலைப்பில் எம்.சி. ராஜன் பேசினாா். பேராசிரியா் சாஹிா்தா பேகம், முஹைதீன் பாதுஷா உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை பேராசிரியா்கள் ஜெமி மொ்லின் ராணி, சாகுல் ஹமீது உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT