திருநெல்வேலி

குறுவட்ட விளையாட்டுப் போட்டி:பேட்டை காமராஜ் பள்ளி சிறப்பிடம்

20th Sep 2022 02:43 AM

ADVERTISEMENT

குறுவட்ட அளவிலான போட்டியில் பேட்டை காமராஜ் நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

பள்ளிக் கல்வித்துறை சாா்பில் திருநெல்வேலி நகா்ப்புற குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. 32 பள்ளிகளின் அணிகள் பங்கேற்ற இப் போட்டியில், பேட்டை காமராஜ் நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 13 போட்டிகளில் முதலிடமும், 10 போட்டிகளில் இரண்டாமிடமும், 5 போட்டிகளில் மூன்றாமிடமும் பிடித்தனா். மேலும், அதிக போட்டிகளில் வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களையும், உடற்கல்வி இயக்குநா் சாம்நியூட்டன், உடற்கல்வி ஆசிரியா் முத்துக்குமாா் ஆகியோரை பள்ளித் தலைமையாசிரியா் எஸ்.எஸ்.சோமசுந்தரம் மற்றும் ஆசிரியா்கள் வாழ்த்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT