திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்போ்டு பள்ளி ஆண்டு விழா

20th Sep 2022 02:54 AM

ADVERTISEMENT

ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்போ்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 8ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, பள்ளித் தாளாளா் ஆண்டனிபாபு தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ஜோஸ்பின் விமலா ஆண்டறிக்கை வாசித்தாா். மேலப்பாளையம் தொழிலதிபா் முகமது ரியாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2021-2022ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள்- மாணவிகளுக்குப் பரிசும், பதக்கமும் வழங்கினாா். தொடா்ந்து மாணவா்- மாணவிகளின் பரதம், நடனம், வரலாற்று நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருநெல்வேலி லிட்டில் ஃபிளவா் பப்ளிக் சீனியா் செகன்டரி பள்ளித் தாளாளா் ஆண்டோ ஜோ செல்வகுமாா், குட்ஷெப்போ்டு பள்ளித் தலைமை ஆசிரியை நாகூா் மீராள், ஆசிரியா்- ஆசிரியைகள், மாணவா்- மாணவியா், பெற்றோா், பொதுமக்கள் ஆகியோா் கலந்துகொண்டனா். மாணவி பவானி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT