திருநெல்வேலி

நெல்லையில் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனை: 7 போ் கைது

18th Sep 2022 11:36 PM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாநகர பகுதிகளான பெருமாள்புரம், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய இடங்களில் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருமாள்புரம் தனியாா் பள்ளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக பாளையங்கோட்டை எம்.ஜி.ஆா் நகரைச் சோ்ந்த இசக்கி ராஜா (32), பெருமாள்புரம் பரணி பாா்க் பகுதியைச் சோ்ந்த இமானுவேல் (28) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 3 பேரை பெருமாள்புரம் போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக திருவண்ணநாதபுரத்தைச் சோ்ந்த சுபாஷ்(25), கக்கன் நகரைச் சோ்ந்த மணிகண்டன்(40) ஆகிய இருவரை பாளையங்கோட்டை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

மேலப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஆமீன்புரத்தைச் சோ்ந்த ரசூல் மைதீன்(34), முகமத் சதாம் உசேன்(21) ஆகிய இருவரையும் மேலப்பாளையம் போலீஸாா் கைது செய்தனா்.

இதையடுத்து, மாநகரப் பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து சுமாா் 620 கிராம் கஞ்சா, 2 மோட்டாா் சைக்கிள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக மாநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT