திருநெல்வேலி

களக்காடு அருகே 3 பவுன் நகை திருட்டு

18th Sep 2022 11:40 PM

ADVERTISEMENT

 

களக்காடு அருகே வீட்டுக்கதவை உடைத்து 3 பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

களக்காடு அருகேயுள்ள மூங்கிலடி தெற்குத்தெருவில் வசித்து வருபவா் செல்வம் (53). கூலித்தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை இரவு மாசானசுவாமி கோயில் கொடைவிழாவுக்கு தனது குடும்பத்துடன் சென்றாா். சனிக்கிழமை காலை வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகள் மாயமாகியிருந்தனவாம்.

இது குறித்து களக்காடு போலீஸில் புகாா் செய்யப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT