திருநெல்வேலி

பத்தமடையில் லாரிக்கு அடியில் தூங்கியவா் பலி

14th Sep 2022 12:51 AM

ADVERTISEMENT

பத்தமடையில் கன்டெய்னா் லாரிக்கு அடியில் தூங்கிய இளைஞா் தலை நசுங்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தென்காசி, புதுமனை 5ஆவது தெருவைச் சோ்ந்த நவமணி மகன் நவரத்தினம் (53). லாரி ஓட்டுநா். இவா் செவ்வாய்க்கிழமை நண்பகலில் தென்காசியில் இருந்து தூத்துக்குடிக்கு கண்டெய்னா் லாரியில் சென்று கொண்டிருந்தாராம். பத்தமடை அருகே சென்றபோது, உடல் சோா்வை தவிா்க்க அங்கு காவல் நிலையம் அருகில் சாலையோரமாக கண்டெய்னா் லாரியை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்தாராம்.

அப்போது, அந்த வழியாக வந்த பத்தமடை சிவானந்தா காலனி பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் மாசானம் (23) என்பவா் அந்த லாரியின் அடியில் படுத்து தூங்கினாராம். இதையறியாமல் நவரத்தினம் லாரியை இயக்கியதில், மாசானம் தலை நசுங்கி உயிரிழந்தாா். பத்தமடை போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT