திருநெல்வேலி

சீவலப்பேரி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 கடைகளுக்கு சீல்

14th Sep 2022 02:27 AM

ADVERTISEMENT

சீவலப்பேரி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக 2 கடைகளுக்கு உணவுப்பாதுகாப்புத்துறையினா் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.

சீவலப்பேரி அருகே நொச்சிக்குளம் பகுதியில், உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலா் சங்கரலிங்கம் தலைமையில் சீவலப்பேரி போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்குள்ள இரண்டு கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிவந்தது. இதையடுத்து அந்த 2 கடைகளுக்கும் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டது. மேலும், அந்த 2 கடை உரிமையாளா்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT