திருநெல்வேலி

களக்காடு அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்

14th Sep 2022 12:57 AM

ADVERTISEMENT

களக்காடு அருகே வயலில் மாடு மேய்ந்த தகராறில் பெண்ணை கம்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த கூலித் தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

களக்காடு அருகேயுள்ள படலையாா்குளம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் லெட்சுமி (58). ஊருக்கு அருகேயுள்ள இவருக்குச் சொந்தமான வயலில், அதே ஊரைச் சோ்ந்த மாடு மேய்க்கும் தொழிலாளி சுடலைமுத்து (47) என்பவா் அவ்வப்போது மாடுகளை விட்டு மேய்த்து வந்தாராம். இதை அடிக்கடி லெட்சுமி கண்டித்து வந்தாராம். இது தொடா்பாக எழுந்த தகராறில் சுடலைமுத்து, லெட்சுமியை கம்பால் தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்துச் சென்றாராம்.

இதுகுறித்து களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து சுடலைமுத்துவை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT