திருநெல்வேலி

ஒரு லட்சம் பனை விதைகள் விநியோகம் தொடக்கம்

14th Sep 2022 02:23 AM

ADVERTISEMENT

தென்மாவட்டங்களுக்கு நிகழாண்டுக்கான ஒரு லட்சம் பனை விதைகள் விநியோகம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஒரு லட்சம் பனை விதைகளைஅனுப்பி வைக்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு, ஆட்சியா் வே.விஷ்ணு தலைமை வகித்தாா். இதில், ஒரு லட்சம் பனை விதைகளை 5 மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் வாகனங்களை தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: நமது தமிழ் நாட்டின் அடையாளமாக இருப்பது பனை மரம். இத்தகைய மரங்களை வெட்ட அரசு அனுமதி பெற வேண்டும். வேளாண்துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பனை விதைகளை நடவேண்டும். ஆண்டுதோறும் ஒரு லட்சம் பனை விதைகளை இலவசமாக கொடுப்பதாக சட்டப்பேரவையில் தெரிவித்தப்படி, கடந்த ஆண்டு 1 லட்சம் விதைகள் வேளான்துறை மூலம் அனுப்பப்பட்டன. அதன்படி, நிகழாண்டும், ஒரு லட்சம் பனை விதைகள் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு அனுப்பி நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது விதைத்த பத்து முதல் பதினைந்து ஆண்டுகளில் பலன் தரும் பயனுள்ள மரமாகும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் சிவ கிருஷ்ண மூா்த்தி, வேளாண்மை இணை இயக்குநா் டேவிட் டென்னிசன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சுப்பையா, மாவட்ட உறுப்பினா்கள் கனகராஜ், பாஸ்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT