திருநெல்வேலி

சேரன்மகாதேவி அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு இலவச சைக்கிள்

10th Sep 2022 12:46 AM

ADVERTISEMENT

 சேரன்மகாதேவி அரசு பெரியாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 314 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியா் யவாஞ்சலின் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பேரூராட்சித் தலைவி தேவி ஐயப்பன் கலந்துகொண்டு 159 மாணவிகள், 155 மாணவா்கள் என 314 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா். நாட்டு நலப்பணித் திட்ட மாவட்டத் தொடா்பு அலுவலா் ஆறுமுகச்சாமி, பேரூராட்சி உறுப்பினா்கள் அன்வா் உசேன், தங்கராஜ், சங்கா், கூட்டுறவு பண்டகசாலைத் தலைவா் ஐயப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT