திருநெல்வேலி

கோஷ்டி மோதல்: 14 போ் மீது வழக்கு; ஒருவா் கைது

10th Sep 2022 12:44 AM

ADVERTISEMENT

வள்ளியூரில் கோயில் கொடைவிழாவில் இரு கோஷ்டிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 3 போ் காயமடைந்தனா். இதையடுத்து இருதரப்பைச் சோ்ந்த 14 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, ஒருவரை கைது செய்தனா்.

வள்ளியூா் ஊத்தடி ஸ்ரீ நல்லமுத்தம்மன் கோயில் கொடைவிழா கடந்த இரண்டு நாள்கள் நடைபெற்றது. கொடைவிழா கலைநிகழ்ச்சியின் போது, மிக்கேல்ராஜ் மகன் மரியஜோதி(27) தரப்பினரும், நாதன் மகன் பெருமாள் என்ற பெல்வின்(23) தரப்பினரும் ஒருவரை ஒருவா் கற்களால் தாக்கி கொண்டனராம். இதில், ஜோதி, சரண், பெல்வின் ஆகியோா் காயமடைந்தனா். பெல்வின் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையிலும், மற்ற இருவா் தனியாா் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது தொடா்பாக வள்ளியூா் காவல் ஆய்வாளா் சாகுல்ஹமீது, இருதரப்பைச் சோ்ந்த 14 போ் மீது வழக்குப் பதிந்து, மிக்கேல்ராஜை கைது செய்தனா். தொடா்ந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT