திருநெல்வேலி

களக்காடு அருகே முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேகம்

10th Sep 2022 12:45 AM

ADVERTISEMENT

களக்காடு அருகேயுள்ள நடுச்சாலைப்புதூா் முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 6ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. மஹா பூா்ணாஹுதி, தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியாா்கள் கோயில் கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினா். தொடா்ந்து முத்தாரம்மன் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஊா் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT