திருநெல்வேலி

நாளை தொல்லியல் நடை சுற்றுலா: முன்பதிவு செய்யலாம்

9th Sep 2022 12:51 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பழமை வாய்ந்த இடங்களுக்கு தொல்லியல் நடை சுற்றுலா செல்ல முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ் வளா்ச்சி பண்பாட்டு மைய துணைத் தலைவா் தி.த.ரமேஷ்ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: இம் மையத்தின் சாா்பில் நெல்லை தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தொல்லியல் நடை என்ற பெயரில் சுற்றுலாவுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. சனிக்கிழமை (செப். 10) காலை 8 மணிக்கு பாளையங்கோட்டை ராமா் கோயில் திடலில் இருந்து சங்கரநாராயணன் தலைமையில் சுற்றுலா தொடங்குகிறது.

இதில், ஆண்டிச்சிப்பாறை, மறுகால்தலை, கிருஷ்ணாபுரம், ஆதிச்சநல்லூா், துலுக்கா்பட்டி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறது. மதிய உணவு, தேநீா், பேருந்து கட்டணம் உள்பட நபா் ஒருவருக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும். இது குறித்த விவரங்களுக்கும், முன்பதிவிற்கும் 9942977800 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT