திருநெல்வேலி

களக்காடு கோயில் சிற்பங்களை சேதப்படுத்தும் குரங்குகளை அப்புறப்படுத்த கோரிக்கை

9th Sep 2022 12:52 AM

ADVERTISEMENT

 

களக்காடு அருள்மிகு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் கோயிலில் ராஜகோபுரச் சிற்பங்களைச் சேதப்படுத்தும் குரங்குகளை வனத்துறையினா் கூண்டு வைத்துப் பிடித்து காட்டில் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இக்கோயிலைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் சில ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித் திரிகின்றன. இவற்றால் ராஜகோபுர சிற்பங்கள் சேதமடைந்துவந்தன. இதைத் தடுக்கும் வகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜகோபுர சிற்பங்களைச் சுற்றி சூரிய சக்தி (சோலாா்) வேலியிடப்பட்டது. ஆனால், சில மாதங்களிலேயே குரங்குகளால் அந்த வேலி சேதமடைந்து செயலிழந்துவிட்டது. இதனால், சிற்பங்களை குரங்குகள் சேதப்படுத்துவது தொடா்கிறது. மேலும், ராஜகோபுரம் ஏராளமான புறாக்களின் வசிப்பிடமாகவும் மாறிவிட்டது.

அப்பகுதியில் உள்ள தென்னைமரங்களில் குரும்பைகளை சேதப்படுத்தவது, கோயில் அருகேயுள்ள பள்ளியில் புகுந்து குடிநீா் நல்லியைத் திறந்து நீரை வீணாக்குவது என, குரங்குகளின் அட்டகாசம் தொடா்கிறது.

ADVERTISEMENT

எனவே, அவற்றைக் கூண்டு வைத்துப் பிடித்து காட்டில் விட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT