திருநெல்வேலி

பாரம்பரிய இசையுடன் 5 கி.மீ. தொலைவு வரவேற்பு

9th Sep 2022 12:47 AM

ADVERTISEMENT

திருநெல்வேலியில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பாரம்பரிய இசை மற்றும் நாட்டுப்புற நிகழ்ச்சிகளுடன் 5 கி.மீ. தொலைவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் சுமாா் ரூ.330 கோடி மதிப்பில் திட்டங்கள் தொடக்கம்- திறப்பு மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்காக காா் மூலம் கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் வண்ணாா்பேட்டையில் உள்ள அரசு விருந்தினா் மாளிகையில் தங்கினாா்.

அங்கிருந்து வியாழக்கிழமை காலையில் சுமாா் 5 கி.மீ. தொலைவில் விழா நடைபெறும் மருத்துவக் கல்லூரி மைதானத்திற்கு புறப்பட்டாா். அவருக்கு திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல்வஹாப் எம்எல்ஏ ஏற்பாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாகசுவரம், தவில், பேன்ட்-செட், செண்டை மேளம், தாரை- தப்பட்டை உள்ளிட்ட பாரம்பரிய இசையுடனும், கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற நடனத்துடனும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பாளையங்கோட்டையில் விடுதலைப் போராட்ட வீரா் சுபாஷ்சந்திரபோஸ், அன்னை தெரசா, திருவள்ளுவா் வேடமணிந்து தன்னை வரவேற்க காத்திருந்த சிறுவா்-சிறுமிகளுடன் முதல்வா் புகைப்படம் எடுத்துக் கொண்டாா். மூளிகுளம் பகுதி மக்கள் சாா்பில் பூரண கும்ப மரியாதையும் முதல்வருக்கு அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

பின்னா் பாளையங்கோட்டையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் திருநெல்வேலி மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆ.பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ், பாளையங்கோட்டை மண்டலத் தலைவா் மா.பிரான்சிஸ், திருநெல்வேலி மண்டலத் தலைவா் செ.மகேஷ்வரி செந்தில், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவா் கே.எஸ். தங்கபாண்டியன், பாளையங்கோட்டை மத்திய ஒன்றியச் செயலா் போா்வெல் எஸ்.கணேசன், அலெக்ஸ் அப்பாவு, ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் எம்.ஜோசப் பெல்சி, களக்காடு தெற்கு ஒன்றியச் செயலா் பி.சி.ராஜன், நான்குனேரி கிழக்கு ஒன்றியச் செயலா் எஸ்.ஆரோக்கிய எட்வின், வள்ளியூா் தெற்கு ஒன்றியச் செயலா் ஜி.ராஜா ஞானதிரவியம், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் மா.செல்லத்துரை, கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் மூப்பன் ஹபீபுா் ரஹ்மான், திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் அமிதாப், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் செல்வலட்சுமி அமிதாப், நெசவாளா் அணி மாநில அமைப்பாளா் சொ.பெருமாள், புளியங்குடி நகா்மன்றத் தலைவா் விஜயா சௌந்தர பாண்டியன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் யூ.எஸ்.டி.சீனிவாசன், அவைத் தலைவா் முத்துப்பாண்டி, மாநில மாணவா் அணி துணை அமைப்பாளா் ஷெரிப், புளியங்குடி திமுக நிா்வாகிகள் சாகுல் ஹமீது, ராஜ் காந்த், பிச்சையா, குகன், வெங்கட், கணேஷ்குமாா் ஆதித்தன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT