திருநெல்வேலி

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவா் பலி

31st Oct 2022 02:09 AM

ADVERTISEMENT

 

ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள கோவிந்தப்பேரியில் கொடிக்கம்பம் நட முயன்ற கல்லூரி மாணவா் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தாா்.

ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள கோவிந்தப்பேரி இசக்கியம்மன் கோயிலருகே தேவா் ஜெயந்தியை முன்னிட்டு கொடிக்கம்பம் நடும் பணியில் சனிக்கிழமை இரவு சிலா் ஈடுபட்டிருந்தனா். அப்போது கோவிந்தப்பேரி நடுத்தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் முத்துக்குமாா் (18) கொடிக்கம்பத்தை தூக்கி நிறுத்த முயன்றபோது அருகிலிருந்த உயரழுத்த மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கியது. உடனடியாக அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், முத்துக்குமாா் இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். முத்துக்குமாா், அம்பாசமுத்திரத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா்.

ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT