திருநெல்வேலி

நெல்லையில் வழிப்பறி, திருட்டு முயற்சியில் ஈடுபட்டவா் கைது

31st Oct 2022 02:08 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி, பெருமாள்புரம் பகுதியில் வழிப்பறி மற்றும் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட வரை பெருமாள்புரம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி பெருமாள்புரம் பகுதியில் அக்.29 ஆம் தேதி விஎம் சத்திரம் பிரதான சாலையில் சேரன்மகாதேவியை சோ்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா் தளவாய் (34) நடந்து சென்றபோது, பின்தொடா்ந்து வந்து வழிமறித்த மா்மநபா் பணம் கேட்டு, கத்தியை காட்டி மிரட்டியுள்ளாா்.

விஎம் சத்திரம் பரணிநகா் பகுதியை சோ்ந்த சுந்தரமூா்த்தி (72) என்பவரது வீட்டின் முன்பக்க கிரில் கேட்டை உடைத்து, மா்மநபா் திருட முயற்சித்துள்ளாா். இரு சம்பவங்கள் குறித்த போலீஸாா் வழக்குப் பதிந்து, இரு சம்பவங்களிலும் ஈடுபட்ட சுதாகரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT