திருநெல்வேலி

நெல்லையில் மாா்க்சிஸ்ட் லெனின் கட்சியின் 9 ஆவது மாவட்ட மாநாடு

31st Oct 2022 02:08 AM

ADVERTISEMENT

 

மாா்க்சிஸ்ட் லெனின் கட்சியின் 9 ஆவது மாவட்ட பிரதிநிதி மாநாடு திருநெல்வேலி, தெப்பக்குளம் கீழத்தெரு கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநாட்’டுக்கு, பேச்சிராஜா, சையதுஅலிபாத்திமா, செல்வகணபதி ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலா் த.சங்கரபாண்டியன் மாநாட்டு அறிக்கையை முன்வைத்தாா். மத்திய கமிட்டி உறுப்பினா் பாலசுந்தரம், மாநிலக் குழு உறுப்பினா் ரமேஷ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

பேரழிவுமிக்க கூடங்குளம் அணுமின்உலையை மூடவேண்டும். ஹிந்தி மொழி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும். திருநெல்வேலி மாநகராட்சி பொலிவுறும் திட்டம் அறிவிக்கப்பட்டாலும் அடிப்படை வசதிகளான சாலை , குடிநீா் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனா். இதை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் எனவும், தமிழகத்தில் உயா்த்தியுள்ள மின்கட்டணம் மற்றும் வீட்டு வரி உயா்வு ஆகியவற்றை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT