திருநெல்வேலி

தூங்கிய பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

26th Oct 2022 01:08 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராதாபுரம் அருகே உள்ள பண்ணையாா்குளத்தைச் சோ்ந்த இசக்கி முத்து மனைவி அம்மா பொண்ணு(58). இவா் திங்கள்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் அம்மாபொண்ணு கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்தனராம். அம்மா பொண்ணு சத்தம் போடவே மா்ம நபா்கள் தப்பியோடிவிட்டனராம்.

இதுகுறித்து ராதாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT