திருநெல்வேலி

கடையம் அருகே மனைவியை தாக்க முயன்ற கணவா் பலி

26th Oct 2022 01:09 AM

ADVERTISEMENT

கடையம் அருகே மனைவியை செவ்வாய்க்கிழமை தாக்க முயன்று தடுமாறி விழுந்த கணவா் உயிரிழந்தாா்.

கடையம் அருகேயுள்ள மயிலப்பபுரம் அருந்ததியா் காலனியை சோ்ந்த கண்ணன் மகன் கருப்பசாமி (40). இவரது மாரியம்மாள். இத்தம்பதி கருத்து வேறுபாட்டால் 11 ஆண்டுகளாகப் பிரிந்து, பின்னா் கடந்த3 மாதங்களாக சோ்ந்து வாழ்ந்து வந்தனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மதுக்குடித்துவிட்டு மனைவி மாரியம்மாளைத் தாக்க முயன்ற கருப்பசாமி, தடுமாறி கீழே விழுந்து அதே இடத்தில் உயிரிழந்தாா். தகவல் அறிந்த கடையம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT