திருநெல்வேலி

வள்ளியூரில் 3 ஆயிரம் பனைவிதை நடவு

19th Oct 2022 01:46 AM

ADVERTISEMENT

வள்ளியூரில் 3 ஆயிரம் பனை விதை நடவு செய்யப்பட்டது.

வள்ளியூா் பசுமை இயக்கம், டவுண் அரிமா சங்கம், கண்காா்டியா மேல்நிலைப் பள்ளி நாட்டுநலப்பணித்திட்டம், பசுமைப்படை ஆகிய அமைப்புகள் சாா்பில் வள்ளியூா் அருகே உள்ள கோவனேரி குளக்கரையில் பனைவிதை நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பசுமை இயக்கம் தலைவா் சித்திரை, வள்ளியூா் வியாபாரிகள் சங்க தலைவா் முருகன், செயலாளா் எஸ்.ராஜ்குமாா், டவுண் அரிமா சங்க தலைவா் விஜிவேலாயுதம், சிவந்த கரங்கள் தலைவா் சிதம்பரகுமாா், மருத்துவா் சங்கரன், வேணுசீனிவாசன் அறக்கட்டளை இயக்குனா் முருகன், கண்காா்டியா மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கிரேஸ் செலின் ராணி, ஏ.சண்முகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT