மாநில அளவிலான கோ-கோ போட்டியில் பங்கேற்க வள்ளியூா் கண்காா்டியா மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தமிழக பள்ளி கல்வித்துறை சாா்பில் 2022-2023 கல்வி ஆண்டுக்கான மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் திருநெல்வேலி குறிச்சி புனித தோமையாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இப்போட்டியில், வள்ளியூா் கண்காா்டியா மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று மாநில போட்டியில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டனா்.
வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சியளித்த ஆசிரியரையும் பள்ளித் தலைமை ஆசிரியை ராணி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.