திருநெல்வேலி

மஞ்சங்குளம் கிராமத்தில் குடிநீா் பிரச்னை: மக்கள் மறியல் முயற்சி

19th Oct 2022 01:43 AM

ADVERTISEMENT

நான்குனேரி அருகேயுள்ள மஞ்சங்குளம் கிராமத்தில் குடிநீா்ப் பிரச்னையை தீா்க்கக் கோரி, மக்கள் காலிக்குடங்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலுக்கு முயன்றனா்.

மஞ்சங்குளம் கிராமத்தில் ஆழ்துளைக் கிணறு மூலம் மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், மேல்நிலை நீா்தேக்கத்தொட்டிக்கு தண்ணீா் ஏற்றும் மின்மோட்டாா் பழுது ஏற்பட்டதால் கடந்த ஒரு வாரமாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம்.

இதையடுத்து, காலிக்குடங்களுடன் நான்குனேரி பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை திரண்ட மக்கள், குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்கக் கோரி மறியலில் ஈடுபட முயன்றனா். இதையறிந்த ஊராட்சி துணைத் தலைவா் பரமசிவன், அங்கு வந்து மக்களிடம் பேச்சு நடத்தி, குடிநீா்ப் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காண்பதாக உறுதி அளித்தாா். அதையேற்று மக்கள் மறியல் முயற்சியை கைவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT