திருநெல்வேலி

பாளை.யில் குடிநீா் கோரி மக்கள் தா்னா

19th Oct 2022 03:23 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டோ ஜோதிபுரம் பகுதியில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சியின் 32 ஆவது வாா்டுக்குள்பட்ட ஜோதிபுரம் பகுதியில் குடிநீா் விநியோகம் சீராக இல்லையாம். இதனை கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அவா்கள் கூறுகையில், ஜோதிபுரம் நந்தனாா் தெருவில் சுமாா் 200 குடும்பத்தினா் வசித்து வருகிறாா்கள். எங்கள் பகுதிக்கு கடந்த 6 மாதங்களாக குடிநீா் விநியோகம் சீராக இல்லை. அடிபம்பும் பழுதாகி உள்ளது. ஆகவே, சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். தகவலறிந்ததும் பாளையங்கோட்டை போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT