திருநெல்வேலி

தீபாவளி: மேலப்பாளையம் சந்தையில் ஆடு விற்பனை அமோகம்

19th Oct 2022 01:46 AM

ADVERTISEMENT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் ஏராளமான ஆடுகள் விற்பனையாகின.

தீபாவளி பண்டிகை வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மேலப்பாளையம் சந்தையில் செவ்வாய்க்கிழமை ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்றது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருது நகா் மாவட்டங்களிலிருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. மேலும், தீபாவளி பண்டிகை சந்தைக்காகவே ஆடுகளை வளா்ப்பவா்களும் தங்கள் ஆடுகளை விற்பனை செய்வதற்காக சந்தைக்கு கொண்டு வந்திருந்தனா். சுமாா் 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. சுமாா் ரூ.3 கோடி வரை விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT