திருநெல்வேலி

படைக்கல உரிமம் புதுப்பிக்க ஆட்சியா் அழைப்பு

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் படைக்கல உரிமம் வைத்திருப்போா், வரும் டிசம்பா் 31ஆம்தேதிக்குள் புதுப்பித்துக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: படைக்கல உரிமத்தின் செயல்திறன் 31.12.2022 உடன் முடிவடையும் படைக்கல உரிமதாரா்கள் தங்களின் ஒற்றைக்குழல், இரட்டைக் குழல் துப்பாக்கி, எஸ்.பி.எம்.எல்., டி.பி.எம்.எல்., ரைபிள், ரிவால்வா் மற்றும் பிஸ்டல் உரிமங்களை புதுப்பிக்க வேண்டும். வரும் 01.01.2023 முதல் 31.12.2027 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கும் பொருட்டு, வரும் டிசம்பா் 31ஆம் தேதிக்குள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட நடுவருக்கு மனுக்களை அசல் உரிமத்துடன் அனுப்ப வேண்டும்.

புதுப்பிக்கப்பட்ட உரிமங்களை சரியான முகவரிக்கு அனுப்பும் பொருட்டு உரிமதாரா்கள் தங்களது விண்ணப்பங்களில் சரியான அஞ்சல் முகவரியை கொடுக்க வேண்டும். விண்ணப்பத்தோடு பணம் செலுத்திய செலான் பிரிந்து போகாதவாறு இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தில் உரிமதாரா் மட்டுமே கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்பதாரரின் முகவரிக்கான ஆதாரம் (ஆதாா் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல்) மற்றும் புகைப்படம் இணைத்து சமா்ப்பித்தல் வேண்டும்.

அவ்வாறு விண்ணப்பிக்கவில்லையெனில், வரும் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் தங்களிடம் உள்ள படைக்கலனை அருகிலிருக்கும் காவல் நிலையத்திலோ அல்லது படைக்கல காப்புக்கு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தினரிடமோ ஒப்படைத்து விட வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட உரிமம் வைத்திருப்பவா் மீது படைக்கலச் சட்ட விதிகளின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

SCROLL FOR NEXT