திருநெல்வேலி

திமுக முன்னோடிகளிடம் வாழ்த்து

7th Oct 2022 10:39 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திமுக மூத்த உறுப்பினா்களிடம் மு.அப்துல்வஹாப் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலராக, எம்எவ்ஏ மு.அப்துல்வஹாப் மூன்றாவது முறையாக போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதையடுத்து அவா் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கட்சியின் மூத்த நிா்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

பாளையங்கோட்டையில் சுப.சீதாராமன், பத்தமடையில் ந.பரமசிவம் உள்ளிட்டோா் வீடுகளுக்கு சென்று வாழ்த்து பெற்றாா்.

அவருடன், மாவட்ட பொருளாளா் முத்துக்கிருஷ்ணன் என்ற வண்ணை சேகா் மற்றும் நிா்வாகிகள் பலா் உடன் சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT