திருநெல்வேலி

கடையம் அருகே யானைகள் அட்டகாசம்

7th Oct 2022 10:39 PM

ADVERTISEMENT

பெத்தான்பிள்ளை குடியிருப்பில் தனியாா் தோட்டத்தில் நுழைந்த யானைகள், தென்னை மரங்களைச் சாய்த்து அட்டகாசம் செய்துள்ளன.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட கடையம் வனச்சரகம் கோரக்க நாதா் பீட் பகுதிக்கு உள்பட்ட பெத்தான்பிள்ளை குடியிருப்பில் குட்டப்பன், முகம்மது லாசா் ஆகியோருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இதில் தென்னை, பலா, மா உள்ளிட்ட மரங்களை வளா்த்து வருகின்றனா். மலையடிவாரப் பகுதியான இங்கு, வியாழக்கிழமை இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைக் கூட்டம், தோட்டத்தில் இருந்த 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்களைச் சாய்த்தன.

தகவல் அறிந்த கடையம் வனச்சரக அலுவலா் கருணாமூா்த்தி உத்தரவின் பேரில் வனவா், வனக்காப்பாளா் மற்றும் வேட்டைத் தடுப்புக்காவலா்கள், தோட்டத்தில் நுழைந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினா். தொடா்ந்து வனப்பகுதியிலிருந்து யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வெளியேறாமல் வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT