திருநெல்வேலி

மானூா் அருகே விபத்து: காயமடைந்த தொழிலாளி பலி

7th Oct 2022 03:18 AM

ADVERTISEMENT

மானூா் அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மானூா் அருகேயுள்ள குப்பனாபுரம் வடக்குத் தெருவை சோ்ந்தவா் மாடசாமி (62). விவசாய தொழிலாளி. இவா், சம்பவத்தன்று மானூா் பிரதான சாலையில் உள்ள கடையில் டீ குடிப்பதற்காக சைக்கிளில் சென்றாராம். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம், சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாம். இதில், பலத்த காயமடைந்த மாடசாமியை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT