திருநெல்வேலி

கால்நடை சாா்ந்த தொழில்கள்:வங்கி கடனுதவி பெற வாய்ப்பு

7th Oct 2022 10:41 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை சாா்ந்த தொழில்கள் தொடங்க விரும்புவோா் வங்கிக் கடன் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் பால், இறைச்சி, கால்நடை தீவனம் மற்றும் கால்நடை தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்யும்- பதப்படுத்தும் அலகுகளை புதிதாக உருவாக்கவும், இருப்பதை மேம்படுத்தவும் மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற தனிநபா் தொழில் முனைவோா், தனியாா் நிறுவனங்கள், எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள், பிரிவு 8 நிறுவனங்கள் மற்றும் விவசாய உற்பத்தி நிறுவனங்கள் தகுதியுடயவை ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் மேற்கூறிய தொழில்கள் தொடங்க 90 சதவீதம் வரை வங்கிக்கடன் பெற வசதிகள் உள்ளன. வங்கிகள் மூலம் திட்டம் செயலாக்கத்திற்கு வழங்கப்படும் வங்கிக்கடனுக்கான வட்டித்தொகையில் 3 சதவீதம் கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் மூலம் மானியமாக வழங்கப்படும்.

ADVERTISEMENT

இதற்கான தகுதியுடையோா் திட்ட மதிப்பீட்டு அறிக்கை தயாா் செய்து விண்ணப்பிக்க கால்நடை பராமரிப்புத்துறை -மாவட்ட தொழில் மையம் மூலம் உதவிகள் செய்யப்படும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT