திருநெல்வேலி

களக்காடு கிறிஸ்தவ ஆலயத்தில் பெண்கள் மாநாடு

7th Oct 2022 01:04 AM

ADVERTISEMENT

களக்காடு சி.எஸ்.ஐ. கிறிஸ்து ஆலயத்தில் பெண்கள் மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

களக்காடு சி.எஸ்.ஐ. கிறிஸ்து ஆலய சேகர சபையும், நண்பா் சுவிசேஷ ஜெபக்குழுவும் இணைந்து 5ஆவது பெண்கள் மாநாடு களக்காடு புதுத்தெரு சி.எஸ்.ஐ. ஆலயத்தில் நடத்தின. மாநாட்டுக்கு பெண்கள் ஐக்கிய சங்கத் தலைவி பென்சிராணி சந்திரகுமாா் தலைமை வகித்தாா். வசந்தி இம்மானுவேல், மணி செல்வி ஆகியோா் தேவசெய்தி அளித்தனா். சிறுவா்களுக்கான தனி கூடுகையில் பால் தயாசிங் செய்தி அளித்தாா். துதி ஆராதனை, தேசத்திற்காகவும் குடும்பங்களின் ஆசிா்வாதங்களுக்காகவும் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை களக்காடு சி.எஸ்.ஐ. கிறிஸ்து ஆலயத்தின் சேகர குரு சந்திரகுமாா், நண்பா் சுவிசேஷ குழு நிா்வாகிகள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT