திருநெல்வேலி

முக்கூடல் முத்துமாலை அம்மன் கோயிலில் சூரசம்ஹாரம்

7th Oct 2022 10:41 PM

ADVERTISEMENT

முக்கூடல் அருள்மிகு முத்துமாலை அம்மன் கோயிலில் நவராத்தியை முன்னிட்டு மகிஷாசுரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் நவராத்திரி விழா 10 நாள்கள் நடைபெற்றது. தினமும் அம்மன் பல்வேறு அவதாரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பெண்கள் நவராத்திரி பஜனை பாடல்கள் பாடும் நிகழ்ச்சியை தொடா்ந்து சிறப்பு அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. 10ஆம் நாளில் தாமிரவருணி ஆற்றங்கரையில் மகிஷாசுரனை அம்மன் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, தாமிரவருணி நதிக்கரையில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், வீதி உலா, மஞ்சள் நீராட்டு ஆகியவை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை இந்து நாடாா் சமுதாயத்தினா், ஹரிராம்சேட் நற்பணி மன்றம், நாடாா் இளைஞரணியினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT