திருநெல்வேலி

மின்விசிறி தீப்பிடித்து இளைஞா் காயம்

7th Oct 2022 01:04 AM

ADVERTISEMENT

 

கடையம் அருகே கேளையாபிள்ளையூரில் மின்விசிறி தீப்பிடித்ததில் இளைஞா் காயமடைந்தாா்.

கேளையாபிள்ளையூரைச் சோ்ந்த கருப்பையா மகன் மகேந்திரன் (35). இவா் புதன்கிழமை இரவு மேஜை மின்விசிறி அருகே படுத்துத் தூங்கினாராம். அப்போது திடீரென மின்கசிவு ஏற்பட்டதில் மின்விசிறி தீப்பிடித்து படுக்கையிலும் தீ பரவியதாம். இதில் மகேந்திரன் காயமடைந்தாா். அவா் உடனடியாக தென்காசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கடையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT