திருநெல்வேலி

சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அவகாசம்

7th Oct 2022 01:04 AM

ADVERTISEMENT

சிறுபான்மையின மாணவ, மாணவியா் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 15ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி ஆட்சியா் வே. விஷ்ணு, தென்காசி ஆட்சியா் ப.ஆகாஷ் ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் பள்ளி படிப்பு முதல் தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட முனைவா் பட்டப்படிப்பு வரை பயிலும் இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பாா்சி, ஜெயின் மதங்களைச் சோ்ந்த மாணவ, மாணவியா் 2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகைக்கு இணையதளம் மூலம் புதிதாக விண்ணப்பிக்கவோ, புதுப்பிக்கவோ இம்மாதம் 15-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியா் விண்ணப்பித்து பயனடையலாம் எனக் கூறியுள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT