திருநெல்வேலி

சிங்கம்பாறையில் மருத்துவ முகாம்

7th Oct 2022 10:41 PM

ADVERTISEMENT

தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சிங்கம்பாறை பவுல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இம்முகாமை பேரூராட்சித் தலைவி லெ. ராதா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தாா். திருநெல்வேலி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் ஏ.எஸ். அஷ்ரப் அலி வரவேற்றாா். சிங்கம்பாறை பங்குத்தந்தை அருள் நேசமணி, பேரூராட்சி துணைத் தலைவா் ரா. லட்சுமணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். டெங்கு விழிப்புணா்வு, காசநோய், சத்துணவு கண்காட்சி நடைபெற்றன. 1,152 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT