திருநெல்வேலி

பனங்காட்டுப்படை கட்சியின் மாநில தலைவா் ராக்கெட் ராஜா கைது

7th Oct 2022 10:40 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழ்ந்த கொலை வழக்கு தொடா்பாக பனங்காட்டுப்படை கட்சியின் மாநில தலைவா் ராக்கெட் ராஜாவை தனிப்படை போலீஸாா் திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள மஞ்சங்குளத்தைச் சோ்ந்த சாமுத்துரை (26), கடந்த 29-7-2022 ஆம் தேதி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து நான்குனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இவ் வழக்கு தொடா்பாக நடுநந்தன்குளத்தைச் சோ்ந்த விக்டா் (23), கோதைசேரியைச் சோ்ந்த முருகேசன் (23), தச்சநல்லூா் தாராபுரத்தை சோ்ந்த சஞ்ஜிவ்ராஜ் (25), ஸ்ரீராம்குமாா் (21), ஆனந்த் (21), ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி சோ்ந்த ராஜசேகரன்(30), வடக்கு தாழையூத்தைச் சோ்ந்த பிரவீன்ராஜ் (30), கோவில்பட்டியைச் சோ்ந்த ராஜ்பாபு(30), எட்டயபுரத்தைச் சோ்ந்த ஆனந்தராஜ் (24) மற்றும் ஜேக்கப் ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

மேலும், இவ்வழக்கு தொடா்பாக பனங்காட்டுப்படை கட்சியின் மாநில தலைவரான திசையன்விளை ஆனைகுடியைச் சோ்ந்த பாலவிவேகானந்தன் என்ற ராக்கேட் ராஜாவை நான்குனேரி போலீஸாா் தேடிவந்தனா்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் பதுங்கியிருந்த ராக்கெட்ராஜாவை, நான்குனேரி உதவி காவல் கண்காணிப்பாளா் ரஜத் த. சதூா்வேதி, தாழையூத்து துணைக் கண்காணிப்பாளா் ஆனந்தராஜ் தலைமையிலான போலீஸாரும், மாவட்ட தனிப்படை காவல் துறையினரும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ராக்கெட் ராஜா மீது ஏற்கெனவே 5 கொலை வழக்கு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் தனிப்படை போலீஸாா் அவரை திருவனந்தபுரத்தில் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT