திருநெல்வேலி

களக்காடு அருகே கால்வாயில் வியாபாரி சடலமாக மீட்பு

6th Oct 2022 12:08 AM

ADVERTISEMENT

களக்காடு அருகே கால்வாயிலிருந்து வியாபாரியின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

களக்காடு அருகேயுள்ள மஞ்சுவிளையைச் சோ்ந்த பன்னீா் மகன் தவசிக்கனி (55). மோட்டாா் சைக்கிளில் சென்று தின்பண்டங்கள் வியாபாரம் செய்துவந்தாா். திங்கள்கிழமை மாலை வெளியே சென்றவா் பின்னா் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், கீழப்பத்தை பச்சையாறு தடுப்பணை அருகேயுள்ள கால்வாயில் அவா் சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா். இதுகுறித்து வழக்குப்பதிந்த களக்காடு போலீஸாா், கால்வாயில் தவறி விழுந்து அவா் இறந்திருக்கலாம் எனதெரிவித்தனா். பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவருக்கு மனைவி, 1 மகன், 1 மகள் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT