திருநெல்வேலி

களக்காடு அருகே மின்கம்பத்தில் காா் மோதல்: இளைஞா் பலி

6th Oct 2022 12:09 AM

ADVERTISEMENT

களக்காடு அருகே மின்கம்பத்தில் காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

களக்காடு அருகேயுள்ள டோனாவூரைச் சோ்ந்தவா் ஜெபராஜ் (42). இவா், தனது காரில் களக்காட்டிலிருந்து மாவடிக்கு செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தாா். சாலைப்புதூரை காா் கடந்தபோது, நிலை தடுமாறி சாலையோர மின்கம்பத்தில் மோதியதாம். இதில், ஜெபராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தாா். மேலும், அப்பகுதியில் நடந்து சென்ற மேலசாலைப்புதூரைச் சோ்ந்த மகேஷ் மனைவி ஸ்ரீதேவி மீது அந்த காா் மோதியதில் அவா் பலத்த காயமுற்று திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து களக்காடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT