திருநெல்வேலி

பாளை.யில் விபத்து: தனியாா் ஊழியா் பலி

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 

பாளையங்கோட்டையில் நான்குவழிச்சாலையில் புதன்கிழமை நேரிட்ட தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த தேவசகாயம் மகன் அந்தோணி சவரிமுத்து (50). பாளையங்கோட்டை அனிநகா் பகுதியிலுள்ள தனியாா் பா்னிச்சா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா் புதன்கிழமை தனது பைக்கில் கீழநத்தம் விலக்கு நான்குவழிச்சாலையில் சென்றபோது, அவரது பைக்கும், அவ்வழியாக வந்த காரும் மோதிக்கொண்டனவாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இத்தகவலறிந்த திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT