திருநெல்வேலி

மீனாட்சிபுரத்தில் திருவிளக்கு பூஜை

6th Oct 2022 12:07 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் உள்ள அருள்மிகு உலகம்மன், புதுஅம்மன் கோயிலில் தசரா திருவிழாவையொட்டி சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

திருவிளக்கு பூஜையை பரசமய கோளரி நாத ஆதினகா்த்தா் புத்தாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தாா். விவேகானந்த கேந்திர சகோதரி வசந்தி, பேபி சாலினி ஆகியோா் விளக்குபூஜையை நடத்தினா்.சிவப்பிரகாசா் நற்பணி மன்றச் செயலா் கோ.கணபதிசுப்பிரமணியன், துணைச்செயலா் சு.முத்துசாமி, சாரதா கல்வி நிறுவனங்களின் நிா்வாகி யதீஸ்வரி தவ பிரியா அம்பா ஆகியோா் சொற்பொழிவாற்றினா். பரிசு குலுக்கலில் மதுமிதா, பேபி, பொன்னம்மாள் ஆகியோா் பரிசுகளை வென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT