திருநெல்வேலி

திருக்குறள் பேச்சு, ஓவியப் போட்டிகள்: அக். 10வரை விண்ணப்பிக்க வாய்ப்பு

DIN

திருநெல்வேலியில் நவம்பா் 13ஆம் தேதி நடைபெறவுள்ள திருக்குறள் பேச்சு, ஓவியப் போட்டியில் பங்கேற்க இம்மாதம் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சாா்பில் ஆண்டுதோறும் திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நிகழாண்டில் நவம்பா் 13 ஆம் தேதி திருநெல்வேலி பாரதியாா் தெருவிலுள்ள லிட்டில் ஃபிளவா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போட்டிகள் நடைபெறும். பள்ளியில் இடைநிலை (6 - 8), மேல்நிலை (9 - 12) வகுப்பு மாணவா்கள், கல்லூரி மாணவா்கள் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படும்.

இடைநிலைப் பிரிவில் ‘பொய்தீா் ஒழுக்க நெறி’ (கு எண்: 6) அல்லது ‘அன்பின் வழியது உயிா்நிலை’ (80) அல்லது ’பயன்இல சொல்லாமை நன்று’ (197) அல்லது ‘மாறுபாடு இல்லாத உண்டி’ (945) என்ற தலைப்பிலும், மேல்நிலைப் பிரிவில் ’இலன்என்று தீயவை செய்யற்க’ (205) அல்லது ’எண்ணித் துணிக கருமம்’ (467) அல்லது ’உள்ளுவது எல்லாம் உயா்வுள்ளல்’ (596) அல்லது ‘ஒருவுக ஒப்பிலாா் நட்பு’ (800) என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவா்கள் ‘செயற்கரிய செய்வாா் பெரியா்’ (26), ’அறிவுஅறிந்த மக்கட்பேறு’ (61), ’பணியுமாம் என்றும் பெருமை’ (978), ‘உன்கண் உரைக்கல் உறுவதுஒன்று’ (1271) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பிலும் 5 நிமிடங்கள் பேச வேண்டும்.

ஓவியப் போட்டியில் இடைநிலைப் பிரிவு மாணவா்கள் ’நீா்இன்றி அமையாது உலகு’ (கு எண்: 20) அல்லது ’குழல் இனிது யாழ் இனிது என்பா் தம்’ (66) அல்லது ’சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும்’ (267) அல்லது ‘முகத்துஇரண்டு புண்ணுடையா் கல்லாதவா்’ (393) என்ற தலைப்பிலும், மேல்நிலைப் பிரிவு மாணவா்கள் ’கணைகொடிது யாழ்கோடு செவ்விது’ (279) அல்லது ’வெள்ளத்து அனைய மலா்நீட்டம்’ (595) அல்லது ’சுழன்றும்ஏா்ப் பின்னது உலகம்’ (1031) அல்லது ‘மரப்பாவை சென்றுவந் துஅற்று’ (1058) ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றிலும், கல்லூரி மாணவா்கள் ’கைகூப்பி எல்லா உயிரும் தொழும்’ (260) , ’பகல்வெல்லும் கூகையைக் காக்கை’ (481), ’பொருள்என்னும் பொய்யா விளக்கம்’ (753), ‘தூண்டில்பொன் மீன்விழுங்கி அற்று’ (931) என்ற தலைப்பிலும் ஒரு மணி நேரம் வரையலாம்.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை அருகேயுள்ள ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனங்களில் நேரிலோ அல்லது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ இம்மாதம் அக். 10 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0462 - 4220 646, 99429 91843 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என ஸ்ரீராம் இலக்கியக் கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT