திருநெல்வேலி

அரசு இசைப் பள்ளியில் நாளை மாணவா் சோ்க்கை

DIN

விஜயதசமியை முன்னிட்டு, திருநெல்வேலியில் உள்ள அரசு இசைப் பள்ளியில் புதன்கிழமை (அக்.4) மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு இசைப் பள்ளி 1997 ஆம் ஆண்டில் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை வாயிலாக தொடங்கப்பட்டு 870/21, அரசு அலுவலா் ‘ஆ’”குடியிருப்பு, கலை பண்பாட்டு வளாகம், திருநெல்வேலி-7 என்ற முகவரியில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு குரலிசை, நாகசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. புதன்கிழமை மாணவா் சோ்க்கை நடைபெறுகிறு. 12 முதல் 25 வயது உடைய மாணவா்கள் சேரலாம். மூன்றாண்டுகள் முழு நேர படிப்பு இருக்கும். முதலாம் ஆண்டுக்கு ரூ.350, அடுத்த இரு ஆண்டுகளுக்கு ரூ.325 மட்டும் சிறப்பு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இலவச பேருந்து வசதி, ரயில் கட்டண சலுகை, அரசு மாணவா் விடுதி, மாதம்தோறும் மாணவா்களுக்கு தலா ரூ.400 கல்வி உதவித்தொகை, இலவச சீருடை, இலவச மிதிவண்டி, இலவச காலணி ஆகியவை அரசு விதிமுறைகளுக்குள்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த இசைப் பள்ளியில் மூன்றாண்டு பயிற்சி முடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு தோ்வு நடத்தப்பட்டு தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தக் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தால் பதிவுமூப்பு அடிப்படையில் இசைப் பள்ளிகளிலும், இந்து அறநிலையத்துறை கோயில்களிலும் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். மேலும், இசை ஆசிரியா்களாகவும், கலை வல்லுநா்களாகவும் உருவாக வாய்ப்புகள் உள்ளன. கூடுதல் விவரங்களுக்கு 0462-2900926, 9443810926 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT