திருநெல்வேலி

பாளை. 37 ஆவது வாா்டில் சாலைப் பணி

4th Oct 2022 03:46 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை 37 ஆவது வாா்டில் புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

பாளையங்கோட்டை மண்டலம், 37 ஆவது வாா்டுக்குள்பட்ட மங்கம்மாள் சாலை குண்டும்-குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனா். இந்தச் சாலையைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அதன்பேரில் புதிய சாலை தாா்ச்சாலை அமைக்கும் பணியை பாளையங்கோட்டை மண்டலத் தலைவா் மா.பிரான்சிஸ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளா் ராமசாமி, உதவி பொறியாளா் நாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT