திருநெல்வேலி

‘நெல், வாழை, உளுந்து, வெண்டை பயிா்களுக்கு காப்பீடு செய்யலாம்’

4th Oct 2022 03:43 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல், வாழை, உளுந்து, வெண்டை உள்ளிட்ட பயிா்களை காப்பீடு செய்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் ராபி பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிா்களை காப்பீடு செய்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தலா ஏக்கா் ஒன்றுக்கு நெல்-ரூ.467 (காப்பீட்டுத் தொகை ரூ.31,100), பாசிப்பயறு- ரூ.269 (ரூ.17,950), மக்காச்சோளம்- ரூ.296 (ரூ.19,750), வாழை- ரூ.3,583 (ரூ.71,650), வெண்டை- ரூ.763 (ரூ.15,250) செலுத்த வேண்டும்.

உளுந்து மற்றும் பாசிப்பயறை காப்பீடு செய்ய நவம்பா்15 ஆம் தேதியும், நெற்பயிருக்கு டிசம்பா் 15 ஆம் தேதியும், மூன்றாம் போக நெற்பயிருக்கு அடுத்த ஆண்டு மாா்ச் 31 ஆம் தேதியும், வெண்டைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதியும் கடைசி நாளாகும்.

ADVERTISEMENT

காப்பீட்டுத் திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிக் கிளைகள், பொது சேவை மையங்களை அனுகலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT