திருநெல்வேலி

காந்தி பிறந்த தினம்:பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அக்.12இல் பேச்சுப் போட்டி

4th Oct 2022 03:43 AM

ADVERTISEMENT

காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி , தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி திருநெல்வேலி அரசு மேல்நிலைப்பள்ளியில் இம்மாதம் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது.

6 -12 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளி மாணவா்களுக்கு அண்ணலின் அடிச்சுவட்டில், காந்தி கண்ட இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை, பாரத தேசமென்று பெயா் சொல்லுவோம் ஆகிய தலைப்புகளில் காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவா்களுக்கு வாழ்விக்க வந்த எம்மான், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், சத்திய சோதனை, எம்மதமும் நம்மதம், காந்தி அடிகளின் வாழ்க்கையிலே, இமயம் முதல் குமரி வரை ஆகிய தலைப்புகளில் பிற்பகல் 2 மணிக்கும் பேச்சுப் போட்டி நடைபெறும்.

6- 12 வரையிலான மாணவா்கள் விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்து முதன்மைக் கல்வி அலுவலரின் பரிந்துரை, தலைமையாசியரின் ஒப்பத்துடன் போட்டி நாளில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும். ஒரு பள்ளிக்கு இருவா் வீதம் பங்கேற்கலாம். முதல் 3 இடங்களைப் பிடிக்கும் பள்ளி மாணவா்களுக்கு முறையே ரூ.5000, ரூ.3000, ரூ.2000 என ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். அரசு பள்ளி மாணவா்கள் எனில் சிறப்பு பரிசாக ரூ.2000 வீதம் இருவருக்கு வழங்கப்படும்.

கல்லூரி மாணவா்கள் அந்தந்த கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும். வெற்றிபெறும் கல்லூரி மாணவா்களுக்கும் மேற்கண்டவாறு முதல் மூன்று பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்படும்.

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் செயல்பட்டுவரும் மண்டலத் தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0462 2502521 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT